மடத்தனமான சோதனை: சீனாவை சாடும் அமெரிக்கா!

வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (11:08 IST)
சீனாவின் மடத்தனமாக சோதனையால் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 
 
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம் பதித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 34,617 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்நிலையில், சீனா மீது அமெரிக்கா கொரோனா விவகாரத்தில் குற்றம்சாட்டி வருகிறது அந்த வகையில் தற்போது சீனா, அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க கொரோனா வைரஸை பரப்பவில்லை என்றாலும் வேறு ஒரு காரணம் உள்ளது என ஒரு புது காரணம் கூறப்படுகிறது. 
 
அதாவது, அமெரிக்க விஞ்ஞானிகளைக் காட்டிலும் சீன விஞ்ஞானிகள் வைரஸ் சோதனையில் தலைசிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள மடத்தனமாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்களது அஜாக்கிரதையால் வைரஸ் வெளியே கசிந்துள்ளது என அமெரிக்க தரப்பில் புது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்