உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 252,077,234 ஆக உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் 252,077,234 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 228,144,082 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 77,028 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50.87 லட்சத்தை தாண்டியது. அதாவது பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,087,172 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.