இந்தியாவிடம் இருந்து நேபாள பகுதிகள் மீட்கப்படும் கே.பி.சர்மா ஒலி பேச்சால் சர்ச்சை!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (21:03 IST)
இந்தியாவிடம் இருந்து நேபாள பகுதிகள் மீட்கப்படும் என முன்னாள் பிரதமர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
 

நமது அண்டை நாடான  நேபாளத்தில்    நவம்பர் மாத இறுதியில்  பொதுத்தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேபாள முன்னாள் பிரதமர்,  கேபி,சர்மா ஒலி இன்று தார்ச்சுலா மாவட்டத்தில் தன் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அதில், எங்கள் கட்சி நேபாள தேசத்தைப்பாதுகாக்கிறது. இங்குள்ள நிலத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், காலாபானிம் லிபுலெக்,லிம்புயதுரா( இந்தியாவில் உள்ள பகுதிகள்) மீண்டும் நேபாளத்திற்கு மீட்டுத் தருவோம் என்று தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்