மூன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம்!

செவ்வாய், 20 ஜூன் 2017 (16:48 IST)
உலகம் முழுவதும் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் கலந்து உள்ளது. இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தடை இருந்தாலும் ஒரு சில மேல் நாடுகளில் இதற்கு அனுமதி உள்ளது.


 
 
பொதுவாக ஓரினச்சேர்க்கை, சாதாரண திருமணம் என்றாலும் இரண்டு பேர் தான் திருமணம் செய்ய முடியும் ஆனால் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மூன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
கடந்த 2016-ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு கொலம்பியா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கொலம்பியாவின் பிரபல நடிகரான விக்டர் ஹீகோ பிராடா மற்றும் அவரது நண்பர்கள் விளையாட்டு ஆர்வலர் ஜான் அலிஜான்ட்ரோ ரோட்ரிகுஸ் மற்றும் பத்திரிக்கையாளர் மனுவல் ஜோஸ் பெர்முடெஸ் ஆகிய மூன்று பேரும் ஓரினச்சேர்க்கை செய்யும் ஒரே குடும்பம் என்ற அந்தஸ்தை பெற சட்ட அங்கீகாரம் கேட்டு கொலம்பியா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
 
இவர்களின் கோரிக்கையை ஏற்ற கொலம்பிய நீதிமன்றம் மூன்று பேரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசிக்க உரிமை வழங்கியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்