மிகப்பெரிய வைரத்தைப் போல காட்சி அளிக்கும் நட்சத்திரம்

வியாழன், 26 ஜூன் 2014 (16:16 IST)
விண்வெளியில் பூமி அளவில் மிகப்பெரிய வைரத்தைப் போல காட்சி அளிக்கும் 'வெள்ளை குறு நட்சத்திரம்' இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
Cold white dwarf star எனக் குறிப்பிடப்படும் இந்த நட்சத்திரம் மிகவும் குளிர்ச்சியுடையதாகவும், மங்கலானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.
 
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் தேசிய வானொலி வானியல் ஆய்வகம், இந்த நட்சத்திரத்தில் குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் அதன் கார்பன் படிகமாகி, மிகப்பெரிய வைரத்தை போல காட்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
 
மேலும், இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து சுமார் 900 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்