பொதுவாக அனைத்து கரப்பான் பூச்சிகளும் பாலை உற்பத்தி செய்வதில்லை. பசுபிக் பகுதிகளில் வாழும் கரப்பான் பூச்சிகள், தங்களின் குஞ்சுகளுக்கு ஒருவித பாலையே உணவாக அளிக்கிறது. அந்த பாலில்தான் புரோட்டின் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த பால், நமது எருமைப்பாட்டின் பாலில் உள்ள புரோதத்தை விட 3 மடங்கு அதிகம் என்றும், அதிக கலோரி நிறைந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அதேபோல், அந்த கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பாலில், மனிதர்களுக்கு தேவையான அமினோ அமிலங்களும் அடங்கியிருப்பதால், எதிர்காலத்தில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.