கடல் மட்டம் 3 அடிவரை உயரும்: நாசா எச்சரிக்கை

சனி, 29 ஆகஸ்ட் 2015 (15:22 IST)
பருவநிலை மாற்றம் புவி வெப்பமடைதல் முதலிய காரணங்களால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 3 அடி உயரும் என்று நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐக்கிய நாடுகளின் குழு பருவநிலை மாற்றம் குறித்தும், கடல் மட்டம் உயர்வு குறித்தும் கடந்த  2013 ஆம் ஆண்டு ஆய்வு நடத்தியது.
 
அந்த அய்வில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது.
 
ஆனால் அது எவ்வளவு வேகமாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது. கிரீன்லாந்து  மற்றும் அண்டார்டிகா போன்ற பகுதியில், பனிப்பாறைகள் உருகியதால் கடல்மட்ட அளவு கடந்த 1992 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 3 அங்குலமாக உயர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது. 
 
23 ஆண்டுகாலமா நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெவியவந்துள்து. இந்நிலையில், கடல் மட்டம் உயர்ந்தால் அது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தானதாக அமையும் என்று நாசா கவலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்