வகுப்பறையில் சரக்கடிக்க கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

சனி, 16 ஏப்ரல் 2016 (14:26 IST)
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மது அருந்தும் போட்டி வைத்த ஆசிரியரை, கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ள சம்பவம், சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சீனாவின், குய்ழோ மாகாணத்தில் சீன பாரம்பறிய வைத்திய முறைகளை கற்றுத்தரும் ஒரு பிரபலமான கல்லூரி உள்ளது. மருந்து வகைகளை தயாரிக்கும் முறை தொடர்பான இறுதி தேர்வின் போது, அந்த கல்லூரி மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் வித்தியாசமான தேர்வு ஒன்றை வைத்துள்ளார்.
 
அதாவது, ஒரு கிளாஸ் மதுவை ஒரு கல்ப்பில் (முழுங்கில்) குடிக்க வேண்டும். அப்படி குடித்தால், அவர்களுக்கு 100 மதிப்பெண். ஒரு மிடறு மட்டும் குடித்துவிட்டு குமட்டினால் 60 மதிப்பெண். அந்த வாசனையை முகர்ந்தவுடன், குடிக்க முடியாமல் தவிர்ப்பவர்களுக்கு மதிப்பெண் இல்லை. அதாவது பூஜ்ஜியம் மதிப்பெண்.
 
எனவே, 100 மதிப்பெண் வாங்குவதற்காக, மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒரு முழுங்கில் குடித்தி விட முயன்றுள்ளனர். இதனால், பல மாணவர்கள் வகுப்பறையிலேயே போதையில் மயங்கி விழுந்துள்ளனர்.
 
இந்த தகவல் வெளியே கசிந்ததும், அந்த ஆசிரியருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சமூகவலைத்தளங்களில் அவரின் செயலை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்து அந்த கல்லூரி உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்