லத்தீன் அமெரிக்காவில் மீண்டும் பறந்த சீன உளவு பலூன்!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (23:01 IST)
அமெரிக்க நாட்டில்  அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

ஏற்கனவே, அமெரிக்காவுக்கும்  சீனாவுக்கும் இடையே தைவான்  நாட்டு தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. 

இந்த நிலையில்,அமெரிக்க நாட்டில் ராணுவ கண்காணிப்பில் உள்ள அணுசக்தி ஏவுதளம் அமைந்திருக்கும் மொன்டானா பகுதியில் சீன நாட்டைச் சேர்ந்த உளவு பலூன் பறந்தது.

இதைச் சுட்டு வீழ்த்த  ராணுவத்தினர் முயற்சித்தனர், ஆனால்,  சுட்டு வீழ்த்தினால் அணு சக்தி ஏவுதளத்திற்கு பாதிப்பு என்பதால் இதை விட்டுவிட்டனர்.

இதுகுறித்த புகாருக்கு சீனா வேண்டுமென்றே அமெரிக்கா குற்றம்சாட்டுதாக கூறியது.

இந்த நிலையில், லத்தீன் அமெரிக்க பகுதியில் மீண்டும் ஒரு  சீன உளவு பலூன் பறந்துள்ளதாக  அமெரிக்க ராணுவத் தலையமைகமான பெண்டகம் தெரிவித்துள்ளது
.

ALSO READ: அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூனால் பரபரப்பு
 
மேலும், லத்தீன் அமெரிக்காவில் பலூன் ஒன்று பறந்து வருகிறது இது சீன உளவு பலூனா என்று ஆய்வு செய்து வருவதாகவும் பெண்டகம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்