ஊழல் இல்லா நாட்டில் ஊழல் செய்து சிக்கிய சீனர்கள்

வியாழன், 13 டிசம்பர் 2018 (18:37 IST)
சரக்கு வாகன ஓட்டுநர்களிடமிருந்து பொருளை ஏற்றி, இறக்குவதற்கு லஞ்சம் பெற்ற இரண்டு சீன குடியேறிகள் மீது சிங்கப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
பெரிய சரக்கு வாகனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்க பயன்படுத்தப்படும் டிரக்குகளின் ஓட்டுனர்கள் தங்களது பணியை தாமதமின்றி செய்வதற்தாக பலமுறை ஒரு டாலர், அதாவது இந்திய மதிப்பில் 70 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
47 வயதாகும் சென் ஜிலியாங், 43 வயதாகும் ஜாவோ யுகன் ஆகிய சீன குடியேறிகளின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 53 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.
 
சிங்கப்பூர் உலகின் மிகக் குறைவான ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இரண்டு ஓட்டுநர்களும் சரக்கு ஏற்றுமதி நிலையம் ஒன்றில் பணிபுரிந்தபோது லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
ஊழியர்கள் நன்முறையில் வேலை பார்க்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூரின் ஊழல் நடைமுறைகள் புலனாய்வு பணியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
 
உலகின் மிகச் சிறிய தீவு நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் ஊழலற்ற நாடு என்ற பெயரை தக்க வைத்துகொள்வதற்காக லஞ்ச புகார்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்