இன்று சீனாவில், நாளை இந்தியாவில்!!

வியாழன், 9 பிப்ரவரி 2017 (11:12 IST)
உலக மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக காற்று மாசுபாடு இருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்பான பிரச்னைகளால் தினந்தோறும் எட்டுப் பேர் இறப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 
 
இந்நிலையில், சீனாவில் காற்று மாசுபாட்டைத் தவிர்க்கும் செடிகள் நிறைந்த கட்டடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே மிகப்பெரும் அளவில் காற்று மாசுபாடு பிரச்னையை சந்தித்துவரும் நாடுகளில் ஒன்று சீனா. 
 
அதனால், இந்த செடிகள் நிறைந்த கட்டடங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் சீனாவில் உள்ள காற்று மாசுபாடு பிரச்னைகளை குறைக்க முடியும். இத்தாலிய கட்டடக் கலைஞர் ஸ்டெஃபானோ போரி பரிந்துரையின்படி இந்தக் கட்டடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
 
இத்தாலியிலும் சுவிட்சர்லாந்திலும் இதுபோன்ற கட்டடங்கள் உள்ளன. ஆனால் ஆசியாவில் இதுவே முதன்முறையாகும். காற்று மாசுபாட்டைத் தவிர்க்க இது போன்ற கட்டடங்கள் இந்தியாவிலும் அமைக்க வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்