தீவிரவாத அமைப்பு ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் கூட்டாளியான பாகிஸ்தான், நிதி மட்டும் பெற்றுக்கொண்டு பயங்கரவாத அமைப்புகள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கையை எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடினார். மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த அனைத்து ராணுவ நிதி உதவிகளையும் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதாவது, பயங்கரவாதத்தை குறிப்பிட்ட நாட்டுடன் இணைத்து பேசிவருவதை சீனா எதிர்க்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது திணிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம்.