பூமியின் மீது விழும் விண்வெளி நிலையம்: எங்கு? எப்பொழுது?

ஞாயிறு, 12 நவம்பர் 2017 (11:07 IST)
சீனாவின் தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்ததால் அது பூமியின் மீது விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


 
 
கடந்த 2011 ஆம் ஆண்டு தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வு கூடத்தை நிறுவியது சீனா. இது 8.5 டன் எடை கொண்டது. 
 
இந்த ஆய்வகம் தரைகட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்ப்பை இழந்ததால் இது செயல் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. 
 
இது பூமியை நோக்கி விழும் வேகத்தில் வளிமண்டல உராய்வின் காரணமாக எரிந்து சிதைந்து விடும் என்றும் சிதை கூளங்கள் மட்டுமே பூமியின் மீது விழ வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிகபட்சமாக 100 கிலோ எடை கொண்ட துண்டு விழ வாய்ப்பிருக்கிறதாம். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இது பூமியின் மீது விழும்.
 
43º வடக்கு மற்றும் 43º தெற்கு ஆகிய இரண்டு அட்சரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விழும் என கணிக்கப்பட்டுள்ளதால் நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், பெய்ஜிங், டோக்கியோ, இஸ்தான்புல், ரோம் ஆகிய முக்கிய நகரங்கள் மீது விழ வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்