இந்தியாவை விட சீனா ராணுவத்திற்காக 3 மடங்கு அதிகம் செலவளிக்கிறது - அமெரிக்கா தகவல்

செவ்வாய், 12 மே 2015 (19:32 IST)
இந்தியாவை விட சீனா தனது ராணுவத்துக்காக 3 மடங்கு அதிகம் செலவழிப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகம்  தெரிவித்துள்ளது.
 

 
அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகன், உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் ராணுவ பட்ஜெட் குறித்து அந்நாட்டு  நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், “சீன கம்யூனிச அரசு தனது ராணுவத்துக்காக கடந்த ஆண்டு 136 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது.
 
இதே கால கட்டத்தில் இந்திய அரசு தனது ராணுவத்துக்காக 38 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் சீனா தனது ராணுவத்துக்கு 3 மடங்குக்கு அதிகமாக செலவிட்டுள்ளது. ரஷ்யா தனது ராணுவத்திற்காக 76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்