சிறுவனுக்கு பறவை காய்ச்சல்... சீனாவில் விநோதம்!

புதன், 27 ஏப்ரல் 2022 (10:42 IST)
சீனாவில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பறவை காய்ச்சல் பரவியிஉப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
ஆம், சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலின் அறிகுறிகள் பறவை காய்ச்சலின் அறிகுறிகலாக இருந்துள்ளது. பின்னர் பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு முதல் முறையாக மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
சிறுவன் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் பரவி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் காய்ச்சல் பரவவில்லை. 
 
மேலும், எச்3 என்8 வைரஸ் மாறுபாடு மனிதர்களை பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை.  எச்3 என்8 பறவை காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்3 என்8 வைரஸ் மாறுபாடு பொதுவாக பறவைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் கண்டறியப்படும் என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்