சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி

வெள்ளி, 2 ஜனவரி 2015 (10:04 IST)
சீனாவின் ஷாங்காய் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 35 பேர் பலியானார்கள். மேலும் 42 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 
சீனாவின் ஷாங்காய் பகுதியில், புராதன அரண்மனைகள் மற்றும் நேர்த்தியான கடைத் தெருக்களை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
 
2015 ஆவது புத்தாண்டையொட்டி, பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், புத்தாண்டு பிறப்பை கொண்டாட ஆயிரக்கணக்கானோர் ஓரிடத்தில் கூடியிருந்த போது, அங்கு சில விஷமிகள் கட்டடத்தின் ஜன்னலில் இருந்து போலி பண நோட்டுகளை வீசினர்.
 
அதனை எடுப்பதற்காக ஒரே இடத்தில் ஏராளமானோர் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாயினர், மேலும் சுமார் 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்