1930-ல் நடந்த போர் மீண்டும் நடக்கும்: அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!!

செவ்வாய், 14 மார்ச் 2017 (10:31 IST)
வர்த்தகம் தொடர்பாக சீனாவுக்கு எதிராக அறிக்கைகள் விட்டு வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.


 
 
இதை தவிர்த்து பண மதிப்பை திரிக்கும் நாடு என சீனாவை விமர்சித்ததுடன், சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 45 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் அச்சுறுத்தல் விடுத்தார். 
 
இந்நிலையில் அமெரிக்காவின் வருடாந்திர பொருளாதார கொள்கை திட்டத்தை வகுத்துள்ள டிரம்ப் நிர்வாகம் அதை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து உள்ளது. 
 
உலக பொருளாதார நிறுவனத்தின் முடிவுகளை புறக்கணிப்பதே இந்த கொள்கையின் சாராம்சமாகும். மேலும் அதிகரிக்கும் இறக்குமதியால் உள்நாட்டு வர்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கான வழிமுறைகளும் உருவாக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நடவடிக்கைகளுக்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. உலக பொருளாதார நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் வர்த்தக மோதல் தொடர்பான நெறிமுறைகளை ஒரு நாடு தனது சொந்த நலனுக்காக புறக்கணித்தால் பன்முக வர்த்தக நுட்பம் பொருளற்றதாகி விடும். இதன் மூலம் 1930–களில் ஏற்பட்ட வணிகப்போர் மீண்டும் வெடிக்கும் என சீனா அமெரிக்க அரசை எச்சரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்