கொரோனா வைரஸால் கரன்சி நோட்டுகளை அழிக்க முடிவு

Arun Prasath

புதன், 19 பிப்ரவரி 2020 (16:45 IST)
சீனாவில் கொரோனா வைரஸால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஹுபெய் மாகாணத்தில் உள்ள கரன்சி நோட்டுகளை அழிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இது வரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72,000 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரஸ், நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலம் பரவ வாய்ப்புள்ளதால், ஹூபாய் மாகாணத்தின் ஷாப்பிங் மால்கள், பேருந்துகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை எரிக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதன் படி வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்களில் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பதில் வைத்து  நோட்டுகளை அழிக்க உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்