வேற்றுக்கிரக வாசிகளை கண்டறியும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி!

திங்கள், 26 செப்டம்பர் 2016 (21:56 IST)
வேற்றுக்கிரக வாசிகள் நடமாட்டத்தை கண்டறியும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை இன்றி சீனா நாட்டிற்கு அர்ப்பணித்தது.
 

 
வேற்று கிரக வாசிகள் நடமாட்டத்தை கண்டறியும் விதமாக உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ரேடியோ தொலைநோக்கியை உருவாக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு சீன அரசு தொடங்கியது.
 
சீனாவின் குயிசு மாகாணத்தில் 1264 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி 500 மீட்டர் பரப்பளவுடன் 30 டன் எடை கொண்டதாகும்.
 
4450 பிரதிபலிப்பான்ளை கொண்ட இந்த தொலைநோக்கியில் பிரபஞ்சத்தில் நடைபெறும் காட்சிகள் இந்த தகடுகளில் பட்டு பிரதிபலிப்புடன் பதிவாகும். இந்த காட்சிகளை வைத்து வேற்று கிரக வாசிகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த தொலைநோக்கி 30 கால்பந்து மைதானம் அளவுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இது இன்று நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்