சவ ஊர்வலத்தில் ஆடை அவிழ்ப்பு நடனத்துக்கு சீனாவில் தடை

சனி, 25 ஏப்ரல் 2015 (08:51 IST)
சீனாவின் கிராமப்புறங்களில் இறுதிச்சடகங்குகள் நடைபெறும் வேளையில் ஒரு வினோதமான வழக்கம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.


 
படிப்படியாக ஆடைகளை களைந்த படியே நடனமிடும் மங்கையர்கள் இறுதி ஊர்வலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
 
எதற்காக? இறந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தான்!
இறுதி சடங்குக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இறந்துபோன மனிதருக்கு அதிகளவில் மரியாதை கிடைக்கும் என சீன கிராபமப்புறத்து மக்களின் நம்புகின்றனர்
 
வெளியுலகுக்கு தெரியாக ஆட்டம்
 
ஆனால் சீனாவின் கிராமப்புறங்களில் நடக்கும் இது போன்ற இறுதிடச்சடங்கு சம்பிரதாயம் வெளி உலகின் பார்வைக்கு அவ்வளவாக தெரிவது கிடையாது.
 
இந்த ஆடை அவிழ்ப்பு நடனம் இறுதிச்சடங்குகளில் ஆடப்படுவது குறித்து நிறைய பேருக்கு தெரியாத நிலையில், சமூக வலைத்தலங்களில் இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சிலர் தங்களது ஆச்சரியத்தையும், கோபத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
 
இது எப்படி ஒரு பாரம்பரிய வழக்கமாக இருந்திருக்க முடியும் என்கிறார் ஒரு வலைப்பதிவர். மற்ரொருவரோ, விளையாடுகிறீர்களா என்ன, கவர்ச்சி ஆட்டம் இறுதிச்சடங்கிலா? என்று வாயை பிளக்கிறார்.
 
ஆடை அவிழ்ப்பு நடனம் சீனாவில் சட்டவிரோதமானது.
 
சமீபத்தில் சீனாவின் கலச்சார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹேபை மாகாணம் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜீ ஆங்க் ஷு என்ற இடத்திலும் ஆபாச நடனமாடும் மங்கையர் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க அழைக்கப்பட்டிருப்பது குறித்து விவரித்திருக்கிறது.
 
இது போன்ற நாகரீகமற்ற நிகழ்ச்சிகள் , சீனாவின் கலாசார மதிப்பக் சீர்குலைத்து விடும் என்றும், இறுதிச்சடங்கில் இடம்பெறும் இந்த கவர்ச்சி நடனங்கள், வளர்ந்து வரும் நவீன சீனவின் வாழ்க்கை முறையை முடக்கும் தன்மை கொண்டது எனவும் சீனாவின் கலச்சார அமைச்சு, கண்டித்திருக்கிறது.
 
தீவிர நடவடிக்கை
 
இதில் நடனம் ஆடியவர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் தண்டிக்கப்பட்டிருக்கிரறார்கள்.
 
இந்த வழக்கத்தை ஒழிக்க அதிகாரிகள் முன்னர் எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை. ஆனால் விடாமுயற்சியுடன் சீன காவல்துறையடன் இணைந்து, இந்த வழக்கத்தை முற்றிலும் ஒழிக்க முடிவு செய்திருக்கிறது சீன கலாச்சாரத்துறை.
 
சீன கிராமப்புற மக்களின் மூடநம்பிக்கைக்கும் சீன கலாச்சாரத்துறையின் விடாமுயற்ச்சிக்கும் சரியான போட்டி தான் அங்கு இப்போது நடைபெறுகிறது என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்