கன்னித்தன்மையை இழக்கும் சிறார்கள்: எச்சரிக்கும் பேராசிரியர்

சனி, 11 ஜூன் 2016 (11:45 IST)
நவீன உலகில் வாழும் இந்த வாழ்க்கையில் எல்லாமே இயந்திர மயமாகி விட்டது என்பார்கள். அதுபோல் தற்போது உடலுறவு கொள்வதற்கு கூட இயந்திரங்கள் உள்ளன.


 
 
வரும் காலங்களில் இளம் வயது சிறார்கள் தங்கள் கன்னித்தன்மையை செக்ஸ் ரோபக்களிடம் இழக்க நேரிடும் என ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் நோயல் ஷார்கி தெரிவித்துள்ளார். இவர் ரோபாட்டிக்ஸ் பேராசிரியர்.
 
இதில் இளம் சிறார்கள் மிகவும் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏற்கனவே இணைய தளங்கள் மூலம் ஆபாச படங்கள் உள்ள தளங்களுக்கு செல்லும் இந்த இளம் சிறார்கள் செக்ஸ் ரோப்போக்கள் மூலம் வரும் காலங்களில் மிகவும் பாதிக்கப்பட உள்ளனர்.
 
இந்த செக்ஸ் ரோபோக்கள் குறித்து பேசிய பேராசிரியர் நோயல் ஷார்கி இயந்திர மனிதர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது பிரச்சினை இல்லை. ஆனால் அந்த இயந்திர மனிதன் செக்ஸ் தான் உங்கள் வாழ்க்கையின் முதல் செக்ஸ் அனுபவம் என்றால் அந்த அனுபவத்தை நீங்கள் வாழ்நாள் முழுக்க விரும்பினால் எப்படி இருக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இயந்திர மனிதனுடனான உடலுறவு மனித உறவுப் பாலத்தையே அழித்து விடும். ஜப்பான், அமெரிக்க நாடுகளில் இந்த மாதிரியான செக்ஸ் பொம்மைகள் விற்கப்படுகின்றன. இதனை அரசின் கடுமையான சட்டங்கள் மூலம் சிறார்களுக்கு விற்பனை செய்யாமல் இருக்க தடுக்க வேண்டும் என அந்த பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்