ஊழலை அம்பலப்படுத்த முயன்ற ஊடகவியலாளர் மீது போலீஷார் தாக்குதல் : வீடியோ இணைப்பு

புதன், 23 செப்டம்பர் 2015 (09:07 IST)
பாகிஸ்தானில் ரயில் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை வெளிப்படுத்த முயன்ற ஊடகவியலாளரை ரயில்வே போலீஷார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


பாகிஸ்தானின்  செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக  பணியாற்றி வருபவர் சந்த் நவாப். ஊழலை அம்பலப்படுத்தும் பஜ்ரங்கி பஜன் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

பாகிஸ்தானில் உள்ள ரயில்நிலையங்களில் டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை செய்தியாக வெளியிட திட்டமிட்ட சந்த், கராச்சி ரயில் நிலையத்தில் அதற்கான ஸ்டிங் ஆப்ரேஷனில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ரயில்வே போலீஷார், சந்த் நவாப் மற்றும் அவருடன் வந்த தொலைக்காட்சி ஊழியர்களை திடீரென தாக்கத் தொடங்கினர். இந்தக் காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியாகின. ஊடகவியலாளர் தாக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஊழலை அம்பலப்படுத்தச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


நன்றி 
ஐ.பி.என். 

வெப்துனியாவைப் படிக்கவும்