சிக்கன் பர்கருக்குள் கம்பளி பூச்சி: போட்டோவுடன் பேஸ்புக்கில் எழுதிய பெண்

சனி, 27 ஆகஸ்ட் 2016 (11:33 IST)
மெக்டொனால்டு நிறுவனத்தில் ஆர்டர் கொடுத்து வரவழைக்கப்பட்ட சிக்கன் பர்கருக்குள் கம்பளி பூச்சி இருந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இங்கிலாந்து மான்ஸ்பீல்டு நகரைச் சேர்ந்தவர் அமீலா பைனஸ். அவர் அந்த பகுதியில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில், இணையதளம் மூலமாக சிக்கர் பர்கர் ஆர்டர் செய்துள்ளார்.
 
சிக்கன் பர்கர் அவரின் வீட்டிற்கு கொண்டு சென்று கொடுக்கப்படது. பசியில் இருந்த அவர் அதை சாப்பிட்டுள்ளார். பாதி சாப்பிட்டு முடிக்கும் போது, ஏதோ வித்தியாசமான சுவை ஒன்றை அவர் உணர்ந்துள்ளர். மீதமிருந்த பர்கரை அவர் பிரித்து பார்த்துள்ளார்.
 
அப்போது, அந்த பர்கருக்குள் ஒரு கம்பளிப்பூச்சி இருந்துள்ளது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும், கம்பளிப்பூச்சை சாப்பிட்டதால் அவரின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. 
 
பர்கருக்குள் இருந்த கம்பளிப்பூச்சியை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்க்கத்தில் பதிவு செய்துவிட்டார். 
 
“மெக்டொனல்ட் நிறுவனத்தில் வாடிக்கையாளருக்கு சுத்தமான உணவுகளை வழங்குவதால், அங்கு சிக்கன் பர்கர் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அனால், பர்கருக்குள் கம்பளிப்பூச்சை பார்த்த பின்பு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால், இந்த சம்பவம் குறித்து மெக்டொனால்ட் நிறுவனம் எந்த இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்