தைரியம் இருந்தால் ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு வா! கனடா பிரதமர் அதிரடி

செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (22:21 IST)
கனடா மக்கள் மீது கனடாவிற்கு வரும் அகதிகள் மீதும் மிகுந்த வைத்துள்ளவர் கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தனது பால்ய நண்பரும், தொலைக்காட்சி நடிகருமான  மேத்யூ பெர்ரி என்பவரை தைரியம் இருந்தால் என்னுடன் குத்து சண்டையில் மோத தயாரா என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். நகைச்சுவையாக அவர் எழுப்பிய இந்த கேள்விக்கு அவருடைய நண்பர்  மேத்யூ பெர்ரி அவர்களும் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்

3

 


“சார்..உங்கள் கட்டுப்பாட்டில்தான் ராணுவம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். எனவே உங்களது அழைப்பிற்கு சம்மதம் தெரிவிக்கிறேன் என்று மேத்யூ பெர்ரி பதிலளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்/

ஏப்ரல் 1ஆம் தேதி இருவரும் சில நிமிடங்கள் டுவிட்டரில் கருத்துக்களை பரிமாறி கொண்டதை கனடா மக்கள் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்