யூடியூப் பார்த்து விமானம் செய்த இளைஞர்

சனி, 3 ஜூன் 2017 (21:19 IST)
கம்போடியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் வீடியோக்கள் பார்த்து விமானம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.


 

 
கம்போடியாவை சேர்ந்த பாயென்லாங் என்பவர் ஒரு கார் மெக்கானிக். இவர் பணி முடிந்து ஓய்வு நேரங்களில் யூடியூப் வீடியோக்கள் பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். விமானம் மிது அதிக ஆர்வம் கொண்ட இவர், விமானம் கட்டுமானம் தொடர்பான வீடியோக்கள் பார்த்து வந்துள்ளார். பின் விமானம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு வேலைகளை தொடங்கினார்.
 
அதன்படி பழுதடைந்த விமான பாகங்களை வாங்கி, காரின் உதிரிபாகங்களை வைத்து ஒருவர் மட்டும் பயணிக்கக்கூடிய விமானம் ஒன்றை உருவாக்கினார். அதில் சிறிது தூரம் பறந்து சாதனையும் படைத்தார்.
 
50 மீட்டர் தூரம் பறந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்நிலையில் அவர், விமானத்தை சீர் செய்து அடுத்து தண்ணீர் மேல் பறந்து காடுவேன் என சவால் விடுத்துள்ளார். மேலும் இவர் பள்ளி படிப்பை தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்