உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில், 63வது செக்டார் இடத்தில் சந்தேகத்திற்கு ஏதுவான வகையில் ஒரு கட்டிடத்தில் வேலைகள் நடந்து வருவதாக வந்த தகவலை அடுத்து கடந்த வியாழக்கிழமை அன்று இரவில் போலீஸார் இந்த நிறுவனத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தினார்கள்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:
இது ஒரு போலியான கால் சென்டர் நிறுவனம். இரவு வேளையில் அமெரிக்கக்குடி மக்களுக்கு தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசி அவர்களது சோசியல் செக்கியூரிட்டி எண்ணில் கோளாறு இருப்பதாகக் கூறி அதனை சரிசெய்வதற்காக பணம் பறித்து வந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்ததாக கூறினார்.
அதாவது , அமெரிக்கர்களுக்கு 9 இலக்க சமுக பாதுகாப்பு எண் வழங்கப்பட்டுள்ளது . இந்த என்ணிற்கு கோளாறு என்று இந்த கால் சென்டர் ஊழியர்கள் அமெரிக்கர்களைத் தொடர்பு கொண்டு பேசி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் கனடா, அமெரிக்கா உட்பட பல நாட்டு மக்களை இவ்வாறு ஏமாற்றி உள்ளதாக 126 பேரை கைது செய்துள்ள சம்பவம் நாட்டில் பரபரப்பாகி வருகிறது.இந்த கும்பலுக்கு வேறு மாநிலத்தில் தொடர்பு இருக்குமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.