குழந்தை உயிரிழந்தது தெரியாமல் பேஸ்புக்கை பார்த்த அம்மாவிற்கு 5 வருட சிறை

சனி, 10 அக்டோபர் 2015 (20:32 IST)
குழந்தையை கவனிக்காமல் மொபைலில் பேஸ்புக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிற்கு இங்கிலாந்து நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.
 
இங்கிலாந்து கிழக்கு யார்ஷயரில் வசித்து வந்த இளம்பெண் கிளாரி பார்னெட்க்கு இரண்டு வயதில் மகன் யோசுவா பார்னெட் உள்ளார்  இந்த குழந்தை கடந்த வருடம் அவரது வீட்டுத் தோட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். 

அப்போது குழந்தையின் அம்மா கிளாரி பேஸ்புக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக குழந்தை குளத்தினுள் விழுந்துள்ளான். ஆனால் கவனிக்காத தாய் பார்னெட் தனது முழுக்கவனத்தையும் பேஸ்புக்கிலே செலுத்தியிருப்பதாக தெரிகிறது.
 
சில மணிநேரம் கழித்து தனது மகனை தேடியபோது, அவன் குளத்தினுள் விழுந்தது தெரியவந்துள்ளது, உடடினயாக குழந்தையை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால், அவளது குழந்தை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்துள்ளது. அப்போது இந்த சம்பவத்தை யார்ஷய நகர போலீஸார் வழக்காக பதிவு செய்தனர். இவ்வழக்கில், குழந்தையை கவனிக்க தவறிய குற்றத்திற்கு கிளாரி பார்னெட்டுக்கு 5 வருட சிறைத் தண்டனையை இங்கிலாந்து நீதிமன்றம் விதித்துள்ளது.  இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம், கிளாரியை நம்பி எந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டாலும்  அக்குழந்தைக்கு உயிரிழப்பு தான் ஏற்படும் என்று குறிப்பிட்டது.
 
ஏற்கனவே இதேபோல், ஒருமுறை, அவரது குழந்தை யோசுவா வீதியில் விளையாடிக் கொண்டிருந்தா நேரத்தில் அவனை கவனிக்காமல் இருந்துள்ளார். அப்போது ஒரு காரில் அடிபடுவதிலிருந்து யோசுவா தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்