கறுப்பு ஜூலை இன அழிப்பு நினைவு கூறல் கூட்டம் : லண்டன் தமிழர் பேரவை அறிவிப்பு

செவ்வாய், 19 ஜூலை 2016 (18:57 IST)
உலகை குலுக்கிய 1983ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இன அழிப்பை நினைவு படுத்தும் விதமாக ஜீன் 25ஆம் தேதி, லண்டன் தமிழர் பேரவை சார்பில் நினைவு கூட்டம் நடத்தப்படுகிறது.


 

 
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
33 வருடங்களின் முன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைப் பலியெடுத்தும் தமிழரின் பல கோடிக்கணக்கான உடைமைகளை சூறையாடி தமிழ் மக்களை இலங்கைத் தீவின் தென் பகுதியிலிருந்து துரத்தியடித்த சிங்கள இனவாதம் காலத்திற்கு காலம் தன் வடிவங்களையும் வியூகங்களையும் மாற்றிக் கொண்டு தமிழ் இனத்தைக் கருவறுக்கின்றது. 


 

 
சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றங்கள் வராத வரை 1956, 1958, 1977, 1983, 2009 இற்குப் பின்னும் இன அழிப்பு தொடரத்தான் போகின்றது. 1983 இல் தமிழருக்கான சரியான பாதுகாப்புப் பொறிமுறை, அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதன் பின்னர் வந்த பல ஆயிரம் தமிழரின் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். "NEVER AGAIN" என்று அடிக்கடி கூறும் சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசினைக் கையாள்வதில் மீண்டும் மீண்டும் தவறுகின்றது.
 
இக் கருப் பொருளை வலியுறுத்தி 1983 கறுப்பு ஜூலை நினைவு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்