அமெரிக்காவில் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய இந்தியர்!!

வியாழன், 29 டிசம்பர் 2016 (11:49 IST)
அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளி காம்தா ராம்நரேயின். இவர் அங்கு விமானங்களை பழுதுபார்ப்பது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் நடத்தி வருகிறார்.


 
 
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டு விமானங்களின் பராமரிப்பு பணிகளை தனது நிறுவனத்தின் மூலம் மேற்கொண்டு வருகிறார்.
 
இதேபோல் விமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை நடத்தி வரும் 5 பேரும், காம்தா ராம்நரேயினும் இணைந்து மெக்சிகோவை சேர்ந்த அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் (சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம்) வரை லஞ்சம் கொடுத்து விமானங்களை பராமரிக்கும் பணி ஆணையை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இது தொடர்பான வழக்கு விசாரணையில் காம்தா ராம்நரேயின் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது.
 
இந்த வழக்கில் அவர்களுக்கு அதிகபட்சமாக நீண்ட கால சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்