பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

வியாழன், 14 ஜனவரி 2016 (11:05 IST)
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் அருகேயுள்ள குவெட்டா நகரில் போலியோ ஒழிப்பு முகாம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.


 

 
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலியோ ஒழிப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வழக்கம் போல முகாமில் குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுக்கப்பட்டு வந்தது.
 
அப்போது, அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் முகாமுக்கு அருகே ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
 
இந்த வெடிகுண்டு சம்பவத்தில் காவல்துறையினர் 12 பேர், நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
 
மேலும் இந்த விபத்தில், 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
 
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி ராணுவ வீரர்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்