கள்ளச்சந்தையில் எபோலா நோய் தாக்கி குணமடைந்தவர்களின் ரத்தம்

புதன், 17 செப்டம்பர் 2014 (12:16 IST)
எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்நோய் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தம் உபயோகப்படுத்தப்படுவதாகவும், இதனால் அதிக தேவை இருக்கும் அந்த ரத்தம்  கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

 
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர். இவ்வாறு குணமடைந்துள்ளவர்களின் ரத்தத்தில் எபோலா வைரஸை எதிர்த்து வீழ்த்தும் தன்மை உள்ளதால், அவர்களின் ரத்தத்தை நோயுற்றவர்களுக்கு பயன்படுத்தி அவர்களை குணப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
எனவே, குணமடைந்தவர்களின் ரத்தத்திற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தேவை அதிகமாக  ஏற்பட்டுள்ளதாகவும்,  அந்த ரத்தம்  கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
 
லைபீரியாவில் பணிபுரிந்து கொண்டிருந்த அமெரிக்க மருத்துவரும், சமூக சேவகருமான ரிச்சர்ட் ஸக்ராவை அண்மையில் எபோலா நோய் தாக்கியது. 
 
இவருக்கு சிகிச்சை மேற்கொள்ள, எபோலா நோய் தாக்கி சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த கென்ட் பிரான்ட்லி என்பவரின் ரத்தம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்