38 நோயாளிகளைக் கொன்று செல்ஃபி எடுத்துக் கொண்ட கொடூர நர்ஸ்

வியாழன், 16 அக்டோபர் 2014 (17:51 IST)
இத்தாலியில் மருத்துவமனை பிணங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துகொள்ளும் விநோத குணமுள்ள டேனியலா போக்கியலி(42) எனும் பெண் செவிலியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
இத்தாலி நாட்டில் உள்ள லூகோ மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் டேனியலா போக்கியலி(42).  அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு, ரோசா என்ற 78 வயது மூதாட்டி உடலில் உள்ள சர்க்கரை அளவைத் தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறார். அப்போது அவருக்கு பொட்டாசியம் கலந்த வீரியமிக்க ஊசிமருந்து ஒன்றை செலுத்தியுள்ளார். இதானால் ரோசாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் டேனியலா செலுத்திய தவறான ஊசி என்பது மருத்துவப் பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது.
 
தகவலறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், டேனியலாவால் இன்னும் எத்தனை பேர் மரணம் அடைந்திருப்பார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இவரால் 38 பேர் மரணம் அடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. 
 
இது குறித்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'போக்கியலி அடிக்கடிப் பிணங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுக்க சொல்லி என்னிடம் கூறுவார்' என்று கூறியுள்ளார். இம்மருத்துவமனையில் 2014 காலாண்டில் 83 நோயாளிகளில் 38 பேர் இறந்து உள்ளனர்.
 
போக்கியலி தினசரி தனது வீட்டில் உள்ள கோபத்தை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் காண்பித்திருக்கிறார். சாதாரணப் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு கூட வீரியம் அதிகமான மருந்துகளை ஊசி மூலம் ஏற்றியுள்ளார். இதன் மூலம் பல நோயாளிகளை கொன்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்