கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடிய கொரில்லா

புதன், 24 டிசம்பர் 2014 (11:38 IST)
அமெரிக்கவில், உலகின் மிக அதிக வயதுடைய பெண் கொரில்லாவாகக் கருதப்படும் கோலோ தனது பிறந்த நாளை, தான் வசித்து வரும் பூங்காவில் கேக் வெட்டிக் கொண்டாடியது.
 
அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ளது கொலம்பஸ் பூங்கா. இந்த பூங்காவில் வசித்து வரும் 58 வயதுடைய கோலோ என்னும் கொரில்லா வசித்து வருகிறது.
 
1956 ஆம் ஆண்டு கொலம்பஸ் பூங்காவில் கோலோ பிறந்தது. உலகளவில் மிக அதிக வயதுடைய கொரில்லா இது தான் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அந்த கொரில்லாவின் 58 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட, அந்தப் பூங்காவின் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
 
அதன்படி, ஆப்பிள் சாஸ், தேன், கேரட், வேர்க்கடலை, வெண்ணெய், ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கேக்கை வாங்கிவந்தனர். அந்த கேக்கை வெட்டித் தனது பிறந்த நாளை கொரில்லா கோலோ கொண்டாடியது.
 
அதைத் தொடர்ந்து, கோலோவுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டதகவும், அந்த விருந்தில் கிச்சிலி பழங்களும், தக்காளி பழங்களும் வழங்கப்பட்டதாகவும் அந்தப் பூங்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
இந்தக் கொரில்லாவின் சந்ததிகள் அமெரிக்காவில் உள்ள பல்வேறு பூங்காக்களில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்