பெர்முடா முக்கோணத்தில்... யுஎஃப்ஒ: நீடிக்கும் மர்மங்களும்

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (12:57 IST)
பல காலமாக தொடர்ந்து வரும் சர்ச்சைகளில் முக்கியமானதாகவும், விசித்திரம் நிறைந்ததாகவும் இருப்பது பெர்முடா முக்கோணம் குறித்த சர்ச்சை.


 
 
ஃபுளோரிடாவின் மியாமி கடல் பகுதியில் துவங்கி போர்டோ ரிகோ மற்றும் கரீபியன் கடலில் பெர்முடா பகுதிகளை இணைக்கும் இந்த முக்கோணம் அமைந்துள்ளது. 
 
ஏலியன் ஆதாரங்கள் சார்ந்த தகவல்களை வழங்கி வரும்  proofofalien.com இணையதளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் பெர்முடா முக்கோண பகுதிகளில் ஏலியன் நடமாட்டம் மற்றும் யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் வந்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸ் தனது தினசரி கையேட்டில் பெர்முடா முக்கோணம் குறித்து எழுதியிருக்கின்றார். அதில் மிகப்பெரிய நெருப்பு பந்து வானத்தில் இருந்து கடலில் விழுந்தது. அந்த எரிபந்து யுஎஃப்ஒ தான் என்றும் இதனாலேயே கொலம்பஸ் பயன்படுத்திய திசைக்காட்டிகள் தவறாக இயங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
1970 ஆம் ஆண்டு பெர்முடா முக்கோண பாதையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானி புரூஸ் கெர்னான் மர்மமான மேகங்களைக் கண்டதாகவும் அவை திடீரென வட்ட வடிவில் மாறி மேகங்களில் சுரங்கம் ஒன்றை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.
 
பஹாமஸ்-இல் இருந்து மியாமி வரை செல்லும் விமானம் வழக்கமாக 60 நிமிடங்களுக்கும் அதிகமாக எடுத்துக் கொள்ளும், அன்று 35 நிமிடங்களில் சென்றடைந்தது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இப்பகுதியானது வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்லும் பாதையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
டோர்படோ போர்கப்பலில் இருந்து ஃபிளைட் 19 விமானம் தனது வழக்கமான பயிற்சியின் போது பெர்முடா முக்கோண பகுதியில் திடீரென மாயமானது. 
 
மேலும் எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து பார்த்த போது பெர்முடா முக்கோணத்தின் மேல் பிரகாசமான ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து பின் சில நிமிடங்களில் அது மாயமாகி விட்டது. இந்தச் சம்பவமும் எவ்வித ரேடாரிலும் பதிவாகவில்லை. 
 
2009 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி பெர்முடா முக்கோணத்தின் அருகே மர்மமான விளக்குகள் காணப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குக் காணப்பட்ட இந்த விளக்குகள் பின் மாயமானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

எனவே பெர்முடா முக்கோணத்தில் ஏலியன் நடமாட்டம் இருக்கலாம் என்ற மர்மங்கள் நீடிக்கின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்