பிரதமரின் காரை உடைத்து லாப்டாப் திருட்டு

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (18:57 IST)
பெல்ஜியம் நாட்டின் பிரதமரின் காரில் இருந்த லாப்டாப் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெல்ஜியம் நாட்டின் பிரதமர் எலியோ டி ரூபோ. இவர் ப்ருஸ்செல்சில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றிருந்தார். அப்போது காரின் ஓட்டுனரும் ஒரு புத்தக கடைக்கு செல்வதை பார்த்த திருடன் ஒருவர் அந்த ஆடி 6 காரின் முன்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த பிரதமரின்  லாப்டாப், மொபைல் சார்ச்சர், சட்டை, பிரீப் கேஸ் போன்றவற்றை திருடி சென்றுள்ளார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட போது, திருடப்பட்ட லாப்டாப்பில் முக்கியமான அரசியல் ஆவணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், இதனை பிரதமர் தரப்பு மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்