சவுதி அரேபியாவில் சக ஊழியரை கொலை செய்தவரின் தலை துண்டிப்பு

வெள்ளி, 31 அக்டோபர் 2014 (12:21 IST)
சவுதி அரேபியாவில் உடன் வேலை பார்க்கும் சக ஊழியரை கொலை செய்தவரின் தலையைத் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் உள்ளன. அங்கு குற்றம் புரியும் கைதிகளுக்கு மிகப் பெரிய தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 

 
இந்நிலையில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஹாடிபின் ரஷீத் அல்– தொசாரி என்பவருக்கும், உடன் வேலை பார்ப்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் அந்த நபரை கொலை செய்தார்.
 
அதை தொடர்ந்து ஹாடிபின் ரஷீத் அல்–தொசாரி கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது தலையைத் துண்டிக்க உத்தரவிட்டது.
 
அதன்படி, நேற்று (30.10.2014) வியாழக் கிழமை அவரது தலையைத் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுபோன்று 50க்கும் மேற்பட்டோருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்