பொதுவாக ஆல்கஹால் குடித்தாலே உடலுக்கு கெடுதி என்று கூறுகின்றனர். ஆனால் ஆல்கஹாலை அளவாக எடுத்து கொண்டால், நிச்சயம் அவை உடலுக்கு நன்மையை கொடுக்கும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பீர் குடித்தால் நீரிழிவு, இருதய நோய்களை தடுக்கும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
23 வயதில் இருந்து 58 வயதுக்குட்பட்டவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து 4 வாரங்கள் ஆல்கஹால் இல்லாத 330 மில்லி கிராம் பீரை குடிக்க வைத்தனர். இதன் முடிவில் பீர் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு மற்றும் உடல் எடை அதிகரிக்காமல் குடல் நுண்ணுயிரிகளின் பன்முக தன்மைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.