தைவான் நாட்டில் உள்ள வீட்டு விலங்குகளுக்கு முடிவெட்டுவதற்காக தனி அழகு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு செல்லப்பிராணிகளை கொண்டு வரும் வாடிக்கையாளர்கள் அவற்றின் மீது பஞ்சு போன்று வளர்ந்துள்ள முடிகளை பல்வேறு வடிவங்களில் வெட்டி விட்டு அழகு பார்க்கின்றனர். இப்படி முடிவெட்டுவதன் வாயிலாக நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகளின் முதுகில் கரடி, குரங்கு போன்ற காட்டு விலங்குகளின் வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன.
விலங்குகளுக்கு முடிவெட்டுவதற்கு குறைந்தது ஆயிரத்து 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அழகு நிலையத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீட்டில் வளரும் விலங்குகளுக்கு வீடு ஏற்பாடு செய்தவர்கள் தற்போது அந்த விலங்குகளுக்கு தேவையான அழகையை செய்து வருகின்றனர். பெரும்பாலும் வீட்டில் வளர்க்கும் விலங்குகளை பிள்ளையாக கருதுவது வழக்கமான ஒன்றுதான்.