நேரலை நிகழ்ச்சியின் போது குழந்தை பெற்றெடுத்த பிபிசி டிவி தொகுப்பாளர்

வியாழன், 17 நவம்பர் 2016 (17:56 IST)
இங்கிலாந்தில் பிரபல பிபிசி தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு நேரலை நிகழ்ச்சியின் போது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது.


 

 
இங்கிலாந்தை சேர்ந்த விக்டோரியா பெர்டிஸ் என்பவர் பிரபல பிபிசி தொலைக்காட்சியில் நிகழிச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை இவர் நேரலையில் நிகழ்ச்சியை வழக்கம் போல் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்.
 
அப்போது திடீரென இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதே வலியோடு நிகழ்ச்சியை முடித்துள்ளார். பின்னர் சக ஊழியர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். விக்டோரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
 
மேலும் மருத்துவர்கள் விக்டோரியாவுக்கு டிசம்பர் மாதம்தான் குழந்தை பிறக்கும் என்று அலோசனை வழங்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்