பங்களாதேஷில் 250 பேருடன் சென்ற படகு நீரில் மூழ்கியது

திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (19:24 IST)
பங்களாதேஷில் 250-க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் பாயும் பத்மா நதியில் அந்த படகு சென்றபோது, இன்று இந்த விபத்து நிகழ்ந்ததாக பங்களாதேஷ் உள்நாட்டு நீர் போக்குவரத்து துறை ஆணைய தலைவர் சம்சுதோஹா கொன்டேகர் தெரிவித்தார்.
 
விபத்துக்குள்ளான படகில் 250-க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்களது கதி என்னவானது என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை என்ற போதிலும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாலேயே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இதனிடையே சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்