பங்காளதேஷ் தாக்குதலில் இந்திய மாணவி பலி

சனி, 2 ஜூலை 2016 (21:07 IST)
பங்காளதேஷில் டாக்கா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. 


 

 
வங்காள தேசம் டாக்கா நகரில் உள்ள ஒரு உணவகத்தை நேற்று இரவு ஐ.எஸ் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு 30-க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு கமாண்டோக்கள் அந்த 6 தீவிரவாதிகளை சுட்டு 13 பிணைக்கைதிகளை காயங்களுடன் மீட்டுள்ளனர். மேலும் ஒரு தீவிரவாதியை உயிருடம் பிடித்துள்ளனர்.
 
இதில் 11 வெளிநாட்டினரையும், 20 வங்காள நாட்டை சேர்ந்தவர்களையும் ஐ.எஸ் தீவிரவாகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலை பற்றி வங்காள நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில் “தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது, தீவிரவாதமே அவர்களின் மதம்” என்றார்.
 
இந்நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் பலியாகியுள்ளார். டாக்காவில் வசித்துவரும் சஞ்சீவ்ஜெயின் என்பவரின் மகளான தருஷி ஜெயின் (19), அமெரிக்காவின் பெர்கிலே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவி ஆவார். விடுமுறையில் தந்தையை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு தருஷி ஜெயின் டாக்கா வந்துள்ளார். 
 
அந்நிலையில், நேற்று இரவு ‘ஹோலே ஆர்டிசன் பேக்கரிக்கு அவர் உணவு அருந்துவதற்காக சென்றிருந்தார். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவரும் சிக்கி பலியாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்