மனைவியின் உடலை தூக்கி நடந்து சென்றவருக்கு உதவ முன்வந்த பஹ்ரைன் பிரதமர்

திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (11:04 IST)
ஒடிசா மாநிலம், காளஹண்டி மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவர் டானா மஜ்ஹய்.


\

 
இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், அவரின் மனைவி அம்மாவட்டதில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாமல், மரணமடைந்துள்ளார்.
 
அவரின் உடலை, மருத்துவமனையில் இருந்து 60 கிலோமீட்டர்  தொலைவில் இருக்கும் அவரின் கிராமத்திற்கு எடுத்துச்செல்ல, மருத்துவமனையின் தரப்பில் உதவி செய்யவில்லை. மனைவியின் உடலை மருத்துவமனையில் இருந்து, கிராமத்திற்கு எடுத்து செல்ல வாகனத்திற்கு பணம் இல்லாததால், அவர், தன் மகளுடன், மனைவியின் உடலை தூக்கிக் கொண்டு, நடந்தே தன் கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார்.
 
அவர் 10 கி.மீ தூரம் நடந்த பின், சில தொலைக்காட்சிகள் அதை ஒளிபரப்பு செய்தன. அதன்பின், ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டு அவரின் மனைவியின் உடலை ஏற்றிச்சென்றனர். இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், இந்த விவகாரம் பஹ்ரைன் நாட்டு பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபாவின் மனதையும் உலுக்கியுள்ளது. இதுபற்றி கேள்விப்பட்ட அவர் மனம் வருந்தியதாகவும், டானா மஜ்ஹய்க்கு உதவ முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதற்காக, டானா மஜ்ஹயின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கேட்டு பஹ்ரைன் தூதரகத்திற்கு அந்நாட்டு பிரதமர் அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த விபரங்கள் கிடைத்ததும், அவருக்கு நிதி உதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்