கவுதமாலா நிலச்சரிவு விபத்து:100 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்

ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (12:02 IST)
கவுதமாலாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


 
 
கவுதமாலாவின் தலைநகரான கவுதமாலா நகரில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் நிலச்சரிவின் காரணமாக  சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன.
 
இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 600க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
 
மண்ணுக்கு அடியில் உயிருடன் புதையுண்டவர்களை மீட்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.
 
இதனிடையே நிலச்சரிவில் சிக்கி இதுவரை நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்