பூமியை போலவே ஏழு கோள்கள் கண்டுபிடிப்பு. வானியல் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்
வியாழன், 23 பிப்ரவரி 2017 (06:29 IST)
மனிதர்கள் வாழும் சாத்தியம் உள்ள பூமியை போலவே ஏழு கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் என்றே கூறப்படுகிறது.
பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான நீர் மற்றும் ஆக்சிஜன் போன்ற தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக மூத்த விஞ்ஞானி மைக்கேல் கில்லான் என்பவர் தெரிவித்துள்ளார்.
பூமியை போலவே ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றும் அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிக்கும் தன்மை பெற்றது என்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.
புதிய கோள்கள் குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து நடைபெறும் என்றும் அந்த கோள்களில் மனிதர்கள் உள்பட விலங்குகள் மற்றும் பறவைகள் ஏற்கனவே வாழ்ந்து வருகின்றனவா? என்பது குறித்தும் ஆய்வுகள் செய்யப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.