பூமியை நோக்கி வரும் ஆபத்தான விண்கல்! – நாசா எச்சரிக்கை!

திங்கள், 8 பிப்ரவரி 2021 (16:05 IST)
இந்த வருடத்தில் பூமிக்கு மிக அருகே ஆபத்தான அளவில் சிறுகோள் ஒன்று நெருங்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது.

விண்வெளியில் உள்ள பல கோள்களையும், பூமி நோக்கி வரும் விண்கற்களையும் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர். அப்படியாக பல விண்கற்கள், சிறு கோள்கள் பூமியை கடந்து சென்றாலும் அவற்றில் பல பூமிக்கு ஆபத்து இல்லாதவையாக அறியப்படுகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வந்து கொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 2001 FO32 என்னும் இந்த சிறுகோள் மார்ச் 21ல் பூமிக்கு மிக அருகே கடக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் கடந்த சில வருடங்களில் பூமியை கடந்து சென்ற சிறுகோள்களில் இதுவே மிகவும் அருகில் கடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்