அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேசியப் பாதுகாப்புப் படைகள் குவிப்பு!

புதன், 13 ஜனவரி 2021 (21:08 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்களால் வன்முறை ஏற்பட்டது. இதே போன்ற ஒரு வன்முறை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று அமெரிக்க அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு கொண்டுவரப்பட்டு உள்ளது என்பதும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இன்று இரவே அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க பாராளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்