ஐ.நா.தூதர்களாக ஏ.ஆர்.ரஹ்மான், அக்‌ஷய் குமார். ஹிருத்திக் ரோஷன் ஆறிவிப்பு

சனி, 5 செப்டம்பர் 2015 (15:21 IST)
ஐக்கிய நாடு சபையின் தூதர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் அக்‌ஷய் குமார். ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஐக்கிய நாடு சபையின் லட்சிய திட்டங்களை விளம்பரப்படுத்தும் பிரச்சார தூதர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பாலின பாகுபாடு களைதல், அனைவருக்கும் சமவாய்ப்பு உள்ளிட்ட 17 அம்சங்களை, லட்சிய இலக்குகளை ஐ.நா.சபை நிர்ணயம் செய்துள்ளது. இது பற்றி மக்களிடம் எடுத்துரைக்க சர்வதேச அளவில் பிரபலமானவர்களை ஐ.நா.சபை தேர்ந்த்தெடுப்பது வழக்கம். இந்த் பட்டியலில், ஆஸ்கார் விருதுபெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் இப்போது சேர்ந்துள்ளனர்.

இவர்கள் தவிர, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட பலர் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்