போலியான வாக்குறுதி… ஆப்பிள் நிறுவனத்துக்கு 87 கோடி ரூபாய் அபராதம்!

புதன், 2 டிசம்பர் 2020 (10:14 IST)
ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு போலியான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதாக இத்தாலி நிறுவனம் ஒன்று 87 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்கள் 30 நிமிடம் வரை தண்ணீரில் இருந்தாலும் எந்த சேதமும் ஆகாது என விளம்பரங்களை வெளியிட்டனர். ஆனால் 4 மீட்டர் ஆழத்தில் தூய தண்ணீரில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என ஆய்வக முடிவுகள் தெரிவித்தன. இதனால் இத்தாலியைச் சேர்ந்த ஏ.ஜி.சி.எம். என்ற ஒழுங்குமுறை ஆணையம்,  தவறான வாக்குறுதிகளை அளித்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக 87 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஆனால் இந்த தொகை மிகவும் குறைவு என கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே அமெரிக்காவில் பேட்டரி தொடர்பாக ஐபோன் நிறுவனம் போலியான் வாக்குறிதி அளித்ததால் இந்திய மதிப்பில் 830 கோடி அபராதம் கட்டி சமரசம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்