பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுகிறார் ஆங்கஸ் டீட்டன்

திங்கள், 12 அக்டோபர் 2015 (21:37 IST)
2015 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆங்கஸ் டீட்டன்(69) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
 
நுகர்வு, ஏழ்மை ஆகியவற்றை போக்குவது பற்றிய இவரது ஆய்வுக்காக நோபல் வழங்கப்படுவதாக அறிவியல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
ஆங்கஸ் டீட்டன் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இங்கிலாந்த் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1983 ஆண்டு பிரிட்டனிலிருந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.
 
நோபல் பரிசு அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டீட்டன், இந்த அறிவிப்பு எனக்கு வியப்பும், மகிழ்ச்சியும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்