பூகோளம் தெரியாமல் பேசிய இம்ரான் கான் – நக்கலடித்த மஹிந்திரா நிறுவனர்

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:57 IST)
ஜெர்மனிக்கு எல்லைக்கு அருகே ஜப்பான் இருக்கிறது என்று பொருள் தருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியுள்ள வீடியோ இணையத்தில் கேலிக்குரியதாக மாறியிருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு மீட்டிங்கில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இம்ரான்கான் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்களிடையே உள்ள எல்லையை பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த எல்லையில் தொழிற்சாலைகள் அமைக்க இருப்பதாகவும், அதன் மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு வலுப்படும் எனவும் அவர் அதில் பேசியுள்ளார்.

அந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்த மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா “ கடவுளே உனக்கு நன்றி.. நல்லவேளை இப்படி ஒருவர் எனக்கு வரலாறு அல்லது புவியியல் ஆசிரியராக வரவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து நெட்டிசன்ஸ் பலரும் இம்ரான் கானின் அந்த வீடியோவை பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். இதுகுறித்து அந்த கமெண்டுகளிலேயே பதிவிட்ட பாகிஸ்தான் நபர்கள் சிலர் “இரண்டாம் உலக போரின் போது ஜப்பான், ஜெர்மனி இடையே ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள். அதன்படி ஜெர்மனி எல்லையில் இருநாடுகளும் இணைந்து தொழிற்சாலைகளை உருவாக்குகிறார்கள் என்பதைதான் அவர் கூறியிருக்கிறார்” என கூறியுள்ளனர்.

ஆனால் இந்த வீடியோ குறித்து இம்ரான்கான் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்